மான்செஸ்டர் ஏர்போர்ட்டில் பயணிகளை பரிசோதிக்க நிர்வாண ஸ்கேனர்

இந்த எக்ஸ்ரே ஸ்கேனர் முன் ஒருவர் நின்றால் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
ரேபிஸ்கேன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த எக்ஸ்ரே சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் முன் நிற்கும் யாரையும் அது நிர்வாணமாக ஸ்கேனர் கருவியில் காட்டும். அத்தோடு நில்லாமல், மார்பகப் பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைக் கூட அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
மேலும், செயற்கையான கால்கள், கைகள், உடலில் போடப்பட்டுள்ள துளைகள், பயணிகளின் அந்தரங்க உறுப்புகள் என அத்தனையையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டிக் கொடுக்குமாம்.
கருப்பு வெள்ளையில் தெரியும் இந்த நிர்வாண ஸ்கன் படத்தை ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பார்ப்பாராம்.
இதுகுறித்து மான்செஸ்டர் விமான நிலைய வாடிக்கையாளர் பிரிவு தலைவர் சாரா பாரட் கூறுகையில், இந்தப் படம் பாதுகாத்து வைக்கப்படாது. படம் எடுக்கப்பட்டவுடன் அதை ஆய்வு செய்து பின்னர் அழித்து விடுவோம்.
பெரும்பாலான பயணிகள், உடல் முழுவதையும் தடவி சோதனையிடுவதை விரும்பவில்லை. அது தங்களது அந்தரங்கத்தில் தலையிடும் செயலாக உணர்கிறார்கள். எனவே இந்த ஸ்கேனர் யாரையும் தொடாமல் அவர்களுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அறிய உதவும். யாரையும் இனிமேல் உடைகளை கழற்றச் சொல்லி சோதனை போடத் தேவையில்லை.
இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை. எனவே பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.
இருப்பினும் இந்த சோதனை வேண்டாம், உடலைத் தழுவி சோதனையிடுங்கள் என்று பயணிகள் கூறினால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
தற்போது சோதனை ரீதியாக இந்த நிர்வாண ஸ்கேனரை வைத்துள்ளனராம். விரைவில் இது நிரந்தரமாக வைக்கப்படுமாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications