செளதி: 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ரியாத்: சௌதி அரேபியாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த இரண்டு மனித வெடிகுண்டு தீவிரவாதிகளை போலீஸார் சுட்டு கொன்றனர். மேலும் ஒருவரை கைது செய்தனர்.
அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மனித வெடிகுண்டு ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெட்டா நகரில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சரும், இளவரசருமான முகமது பின் நையப் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சௌதி போலீஸார் அல் கொய்தா தீவிரவாதிகளை விரட்டி பிடித்து வருகின்றனர். கடந்த வாரம் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய 44 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சௌதியில் மேலும் சில இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பல இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜிசான் நகரில் இருந்து அசிர் மாகாணத்துக்கு செல்லும் வழியில் 120 கிமீ தொலைவில் உள்ள சோதனை சாவடியிலிருந்த போலீஸார் ஒரு அந்தபக்கமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்களை பெண் போலீஸார் ஒருவர் சோதனையிட்ட போது அவர்கள் இருவரும் பெண்கள் அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பெண் வேடமிட்டு வந்த தீவிரவாதிகள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இந்த சண்டையின் போது போலீஸார் ஒருவரும் பலியானார்.
பலியான இரண்டு தீவிரவாதிகளும் மனித வெடிகுண்டுகள் என்றும், அவர்கள் தங்களது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டி வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த காரில் இருந்து வெடிகுண்டுகள், தானியங்கி ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
போலீஸார் பிடிபட்ட தீவிரவாதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சௌதி அரேபியா பகுதியில் மீண்டும் அல் கொய்தாவினரின் அட்டகாசம் தொடர ஆரம்பித்திருப்பது வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications