சங்கரராமன் கொலை வழக்கு - ஒத்திவைப்பு
புதுச்சேரி: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு காரணமாக சங்கரராமன் கொலை வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி வக்கீல்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரம் கோவிலில் வைத்து சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்தக் கொலை வழக்கு தற்போது புதுச்சேரியில் விசாரணையில் உள்ளது.












Click it and Unblock the Notifications