பிரசார் பாரதி இயக்குனர் குழுவை கலைக்க அம்பிகா சோனி முடிவு?

அல்லது அந்த அமைப்பை கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரசார் பாரதி இயக்குனர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே பெரும் பாலிடிக்ஸ் நடந்து வருகிறது. இந்த மோதல்களால் அந்த நிறுவனத்தின் செயல்பாடே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பெரும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பில் பெரும் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
இதையடுத்து பிரசார் பாரதி செயல்படும் விதம் குறித்து விரிவான அறிக்கையை தகவல் ஒலிபரப்புத்துறை உருவாக்கியுள்ளது. இந்த அறிக்கை தான் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில், பிரசார் பாரதி இயக்குநர்கள், நிர்வாக அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்று தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
தகவல், ஒலிபரப்புத்துறையி்ன் தலையீடு இல்லாமல் மத்திய அரசின் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவை இயங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்
உருவாக்கப்பட்டது தான் பிரசார் பாரதி அமைப்பு.
இதில் தகவல், ஒலிபரப்புத்துறை தலையீடக் கூட முடியாத அளவுக்கு சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமைச்சரவையால் கூட மாற்றம் செய்ய முடியாது.
அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் அனுமதியோடு தான் பிரதமர் செய்ய முடியும்.
அந்த அளவுக்கு அதிகாரம் கொண்ட நிறுவனம் பிரசார் பாரதி.
இந் நிலையல் ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து பிரசார் பாரதியின் இயக்குநர் குழுவையே கூண்டோடு கலைத்துவிட அமைச்சர் அம்பிகா சோனி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடமும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
அப்போது பிரசார் பாரதியின் செயல்பாடுகள் சரிவர இல்லையென தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கருதினால் தனக்குள்ள அதிகாரத்தின்மூலம் அதன் செயல்பாடுகளை முடக்கலாம் சட்ட அமைச்சகம் கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications