கடத்தப்பட்டதாக கூறப்பட்ட டிரைவர் நகை திருடி கைது
சிதம்பரம்: கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கார் டிரைவர், ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள பூவாழை கிராமத்தை சேர்ந்தவர் சுதந்திரஹாசன் (26). இவர் சொந்தமாக டாடா சுமோ கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் கடந்த 3 தினங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுதந்தரஹாசன், சக டிரைவரான ஒருவருக்கு போன் செய்துதன்னை விருத்தாசலத்தைச் சேர்ந்த 4 பேர் சுற்றுலா செல்ல அழைத்தனர். நானும் காருடன் சென்ற போது என்னை கடத்தி ஓரிடத்தில் வைத்துள்ளனர் என்று கூறி தொலைபேசியை துண்டித்தாராம்.
இந்த தகவலை சுதந்தரஹாசனின் தம்பி சுதந்தரவாசனிடம் சக டிரைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது அண்ணனை கண்டு பிடித்து தரும்படி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரு வீட்டில் நுழைந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு 80 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் செக்போஸ்ட் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாடா சுமோ காரை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றதால் போலீசார் காரை விரட்டி சென்றனர். கார் ஓரிடத்தில் நின்றவுடன் அதிலிருந்து 3 பேர் நகைகளுடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
காரில் இருந்த டிரைவர் மற்றும் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தக் காரை ஓட்டிய நபர் சுதந்திர ஹாசன் என்று தெரிய வந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications