இந்தோனேசியா: படகில் தவிக்கும் தமிழ் அகதிகள் பட்டினிப் போரில் குதித்தனர்

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து பெரிய படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிட்டத்தட்ட 300 பேர் தப்பிச் சென்றனர். ஆனால் அவர்களை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றனர்.
இவர்களை தற்போது படகிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தங்களை அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி விட்டனர்.
இந்த நிலையில், படகில் உள்ள தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நிலைமை மோசமாகியுள்ளது.
படகின் மீது வாழ்வா, சாவா, சர்வதேச சமுதாயத்துக்காக பட்டினிப் போர் என்று எழுதி வைத்துள்ளனர். படகில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தகைள் என அனைவரும் சாப்பிடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, படகிலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும். அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிட வசதிகள் செய்து தரப்படும், முறைப்படி புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம். அது உரிய வழியில் பரிசீலிக்கப்படும் என இந்தோனேசிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பான்டன் மாகாண குடியேற்றப் பிரிவுத் தலைவர் ஹாரி புர்வன்டோ கூறுகையில், இருப்பினும் தற்போது குறைவான தங்குமிட வசதியே உள்ளது. படகில் உள்ளவர்கள் அனைவரையும் அங்கு தங்க வைக்கவும் முடியாது. அவர்களை வேறு வேறு பகுதிக்குப் பிரித்து அனுப்ப முயன்றால், அதை அவர்கள் ஏற்பார்களா என்றும் தெரியவில்லை என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஈழத் தமிழர்கள் படகில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications