சென்னை ரெளடி கும்பல்கள் மோதல்-ஒருவர் பலி
சென்னை: சென்னையில் இரு ரெளடிக் கும்பல்கள் மோதிக் கொண்டதி்ல் ஒருவர் பலியானார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரெளடி பிரசன்னா, ரெளடி மைக்கேல் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவர்.
இந் நிலையில் நேற்றிரவு பிரசன்னா தனது கூட்டாளிகள் அருண்குமார் (19), செந்தில் ஆகியோருடன் மைக்கேல் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைக்கேலை பிரசன்னா கத்தியால் கழுத்தில் குத்தினார்.
இதையடுத்து மைகேலின் மகன்கள் நெல்சன், மற்றும் நணபர்கள் ரவி, தாம்சன் ஆகியோர் பிரசன்னா கும்பலை அரிவாள்களால் தாக்கினர்.
அதில் அருண்குமாருக்கு வயிற்றில் வெட்டுபட்டு குடல் சரிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து பிரசன்னாவும், செந்திலும் தப்பியோடிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் மைக்கேல் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து நெல்சன், வில்சன், தாம்சன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பிரசன்னா, செந்தில் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications