மதுரை பல்கலை.யின் அக்குபஞ்சர் தெரபி, அழகுக் கலை பயிற்சி
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறையின் மூலம் மூன்று மாதகால அக்குபஞ்சர் தெரபி மற்றும் அழகுக் கலை சான்றிதழ் பயிற்சி தொடங்க உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறையின் மூலம் மூன்று மாத கால அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்கு ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்ப படிவம் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. நேரடி சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியில் சேர 10 ம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் தகுதி உடையவராக கருதப்படுவர்.
மேலும், இந்த பயிற்சி வாரத்தில் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.
இதில், செய்முறைப் பயிற்சியுடன்கூடிய நேரடி அனுபவ பயிற்சி. அக்குபஞ்சர் மருத்துவ மையங்களைப் பார்வையிடல். பயிற்சியின் இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பல்கலைக்கழக துறையின் சான்றிதழ் வழங்கப்படும்.
அழகுக்கலைப் பயிற்சி
இதேபோல, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறையின் மூலம் மூன்று மாதகால சான்றிதழ் அழகுக்கலைப் பயிற்சி தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்பு அக்டோபர் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து பயில விரும்பும் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. நேரடி சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடைபெறும்.
பயிற்சியில் மகளிர் அழகுநிலையம் வைத்தும், மணமகளுக்கு அலங்காரம் செய்வித்தும், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விதவிதமான அலங்காரம் செய்யவும் பல பயிற்சிகள் கற்றுதரப்படுகின்றது.
மேற்கண்ட இரு பயிற்சி வகுப்புகள் குறித்து மேலும் தகவல் அறிய,
இயக்குநர் (பொறுப்பு),
வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
பாண்டியன் ஹோட்டல் எதிர்புறம்,
அழகர்கோவில் சாலை,
மதுரை- 625 002 .
தொலைபேசி எண் 0452- 2537838 எனும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications