தங்கச்சிமடம் மீனவர்களை தாக்கி விரட்டிய இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி விரட்டியுள்ளனர்.
தங்கச்சிமடத்தில் இருந்து சுமார் 75 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் ரெகீஸ் என்பவரின் படகில் கிளாதீஸ், இன்பம், செல்வம், மோகன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். மேலும், படகுகள் மற்றும் வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் 40 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இனிமேல் தாக்குதல் சம்பவம் நடைபெறாது என்று திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவிடம் இலங்கைத் தரப்பு உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியான பின்னர் நடந்துள்ள 3வது தாக்குதல் இது. இதனால் மீனவர்கள் கடும் அதிருப்தியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications