இனி ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தமிழிலும் பெறலாம்
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.
இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.
முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.
இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.
தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications