9 நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு விருது - ஸ்டாலின் வழங்கினார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் சமூக பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில் செயல்படும் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் சமூக பொறுப்புணர்வு விருது வழங்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2007-08-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவித்தார்.
இத்தகைய விருது நாட்டிலேயே தமிழக அரசால்தான் முதல் முறையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரகப்பகுதிகள் மற்றும் நகரங்களிலுள்ள குடிசைப்பகுதிகள், விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச்சுகாதாரம், குடிநீர், மழை நீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக நல மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
அனைத்து பொதுத்துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகளும் இவ்விருது பெற தகுதி உடையவை ஆகும்.
இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பாராட்டத்தக்க சமூக நல மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டிருந்தால், அத்தகைய பணிகள் விருது பெற தகுதியானவையாக எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்திதாள் நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை, செயின்ட் கோபெயன் கிளாஸ் இந்தியா லிமிடெட், சக்தி மசாலா தனியார் நிறுவனம் என 5 நிறுவனங்களும்,
2008-09-ம் ஆண்டிற்காக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ஸ்டீல் அத்தாரிட்டி, ஆஃப் இந்தியா லிமிடெட், ஆர்கிட் கெமிக்கல்ஸ் மற்றும் பர்மா சூட் டிக்கல்ஸ் லிமிடெட், ஸ்ரீராமலிங்கா மில்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்களும் விருது பெற தேர்வு செய்யப்பட்டன.
இரண்டு வருடங்களுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட இந்த ஒன்பது நிறுவனங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், நற்சான்றிதழையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் துணை முதல்வர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் அஷோக்வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications