பாஜக முஸ்லீம் எம்பிக்கு யுஸ் விசா மறுப்பு
டெல்லி: ஐ.நா. சபையில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்ல பாஜக எம்பி ஷாநவாஸ் ஹூசேனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள கிரிஜா வியாஸ், சஞ்சய் நிருபம் (காங்கிரஸ்), டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக), அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்), சையத் ஷாநவாஸ் ஹூசேன் உசேன் (பாஜக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த 5 எம்.பிக்களும் நியூயார்க் செல்ல விசா கோரி இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்க தூதரகத்திடம் விண்ணப்பித்தது. இவர்களில் பாஜக எம்பி சையத் ஷாநவாஸ் ஹூசேன் தவிர மற்ற 4 எம்.பிக்களுக்கு மட்டும் அமெரிக்க தூதரகம் விசா வழங்கியுள்ளது.
இதையடுத்து ஹூசேனைத் தவிர மற்ற 4 எம்பிக்களும் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.
பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹூசேன், அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனது பெயரில் உள்ள ஹூசேன் என்ற வார்த்தை காரணமாகவே இந்தச் செயலை அமெரிக்கா செய்துள்ளது. நான் அமைச்சராக, எம்பியாக பல முறை அமெரிக்கா சென்று வந்துள்ளேன்.
இதற்கு முன்பு எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. எனக்கு அந் நாட்டு அதிபர் ஒபாமா பக்ரீத் வாழ்த்து கூட அனுப்பியிருந்தார். என்றாலும் முஸ்லீம் என்பதால் என் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகத் தெரிகிறது என்றார்.
ஆனால், சில நிர்வாக சிக்கல்கள் காரணமாகவே அவருக்கு விசா வழங்க முடியவில்லை என்று வெளியுறவுத்துறையின் அமெரிக்க பிரிவிடம் அந் நாட்டு தூதரகம் விளக்கம் தந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக் கானை அந் நாட்டு அதிகாரிகள் பல மணி நேரம் காக்க வைத்து சிறப்பு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
விதியை மீறி பறந்த ராஜ்நாத் விமானம்:
இந் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தனி விமானத்தில் வந்தார்.
பின்னர் டெல்லி திரும்ப ராஞ்சி விமான நிலையம் வந்தார். அப்போது மோசமான வானிலை நிலவியதால் விமானம் கிளம்ப அனுமதிக்கப்படவில்லை.
ஆனாலும் அதையும் மீறி பைலட் விமானத்தை கிளப்பிவிட்டார். ராஜ்நாத் நிர்பந்தம் காரணமாகவே பைலட் விமானத்தை ஓட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இதை பாஜக மறுத்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications