அருப்புக்கோட்டை-தலித்களின் முளைப்பாரி ஊர்வலத்தில் மோதல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுப் பாதையில் தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல முயன்ற போது அதை மற்றொரு தரப்பினர் தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது கஞ்ச நாயக்கன்பட்டி கிராமம். இங்கு தலித் மக்கள், கடந்த வியாழனன்று மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக முளைப்பாரி ஊர்வலம் செல்வதற்காக பொதுப் பாதையில் மின் விளக்குகள் கட்டினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தலித் மக்கள் கட்டிய அலங்கார வளைவை அகற்றினர்.
இந்த நிலையில், தலித் மக்கள் அப் பகுதியில் முளைப்பாரி ஊர்வலம் சென்ற போதும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேருக்கு கடும் காயம் ஏற்பட்டது.
அவர்களை சிகிசைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலித்கள் 12 பேர் உள்பட 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோதல் நடைபெற்ற கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். தாமஸ், ஆர்.சந்திரமோகன் மற்றும் எம். துரைசிங்கம், அண்ணாதுரை உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications