மதுராவில் இரு ரயில்கள் மோதல்-22 பேர் பலி

மதுரா ரயில் நிலையத்துக்கு வெளியே இன்று காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
மதுரா ரயில் நிலையத்தை மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு பயணி ஆபாய சங்கிலியை இழுத்துள்ளார். இதையடுத்து அந்த ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் அதே பாதையில் கோவா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ஆனால், முன்னால் வந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் கோவா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த சிவப்பு சிக்னல் போடப்பட்டது.
ஆனால், அதை கவனிக்காத அதன் என்ஜின் டிரைவரும், துணை டிரைவரும் ரயிலை தொடர்ந்து இயக்கினர். இதையடுத்து அந்த ரயில் மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து சின்னாபின்னமாயின. மோதிய வேகத்தில் இரு ரயில்களும் கவிழ்ந்துவிட்டன.
இதில் இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ரயில் பெட்டிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றனது. மீட்புப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மமதா நிதியுதவி அறிவிப்பு...
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவ சிகி்ச்சைக்கான முழு செலவையும் ரயில்வே ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த விபத்தையடுத்து மதுரா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்து குறித்து விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் மமதா உத்தரவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications