தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் - படையினர் உஷாராக இருக்க பிரதமர் கோரிக்கை
டெல்லி: நாட்டில் மீண்டும் பெரிய அளவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது கவலை தருகிறது. எனவே படையினர் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முப்படைத் தளபதிகளுடன் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், இந்தியாவின் அண்டை நாட்டில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தீவிரவாத நடவடிக்கைளால் அங்குள்ள நிலைமை கவலை தருவதாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர், காபூலில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது இந்தியாவின் மீது தீவிரவாதிகள் எந்த அளவுக்கு துவேஷமாக, எதிராக இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் மத்திய அரசுடன், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு, திறந்த மனதுடன் கூடிய சமூகத்தைக் கொண்டது. இதுவே பல நேரங்களி்ல் ஆபத்துகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
தீவிரவாதிகள் எத்தகைய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டாலும் அதை தடுத்து சமாளிக்க பாதுகாப்புப் படையினர் முழு உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் பிரதமர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications