தீபாவளி முடிந்ததும் மீண்டும் ஏறியது சிக்கன், மட்டன் விலை
சென்னை: தீபாவளி முடிந்த அடுத்த நாள் முதலே ஆட்டுக் கறி, கோழிக்கறியின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தி விட்டனர்.
வழக்கமாக ஐப்பசி மாதம் வரும் தீபாவளி இந்த ஆண்டு புரட்டாசியில் வந்தது. அதுவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று வந்து இந்த தீபாவளியை சைவத் தீபாவளியாக்கி விட்டது.
தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அந்த இரண்டு நாட்களும் ஆடு, கோழிக்கறி விற்பனை மகா மந்தமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையாவது விற்பனை இருக்கும் என கடைக்காரர்கள் நினைத்த நிலையில் அன்று கந்தசஷ்டி விரதம் தொடங்கியதால் அன்றும் கறி போணியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆடு, கோழிக் கறியை நாடி மக்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இறைச்சி விலையை கடைக்காரர்கள் கிடுகிடுவென உயர்த்தி விட்டனர்.
ஆட்டுக் கறி விலை கிலோவுக்கு ரூ. 60 வரை ஏற்றி விட்டனர். குடல், தலை கறி ரூ.80-க்கும், நுரையீரல், ரத்தம் ஆகியவை ரூ.20 முதல் 30 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதே போல், கோழிக் கறியும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டது.
இப்படி தடாலடியாக கறி விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பலர் மீன்கள் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஆனால் மீன் விலையும் உயர்வாகவே உள்ளதால் மக்கள் எதைச் சாப்பிடுவது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications