ஜப்திக்கு வந்த யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம்
தர்மபுரி: விபத்தில் பலியான குடும்பத்திற்கு, நஷ்ட ஈடு வழங்க காலம் தாழ்த்திய தர்மபுரியில் உள்ள யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது .
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கலைவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (40). இவர் கடந்த 1998 ஜூன் 16 ம் தேதி, பேச்சாம்பள்ளி - கல்லாவி சாலையில் பைக்கில் சென்ற போது, அய்யனார் அப்பன் என்ற தனியார் பஸ் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
இதனால், நஷ்ட ஈடு கேட்டு ஸ்ரீரங்கன் மனைவி சுசீலா, மகன் செந்தில், மகள் சோனியா ஆகியோர், தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஸ்ரீரங்கன் குடும்பத்துக்கு, தர்மபுரி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நான்கு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, கடந்த 2005 ம் வருடம் ஜனவரி மாதம் 6 ம் தேதி நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், நஷ்ட இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி, மீண்டும் தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 2009 ஆகஸ்ட் 17 ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், விபத்தில் பலியான ஸ்ரீரங்கன் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து, ஏழு லட்சத்து 4,269 ரூபாய், செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பணம் கட்டத் தவறினால் இன்சூரன்ஸ் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற அமீனாக்கள், யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்களை ஜப்தி செய்ய சென்றனர். இரு நாட்களுக்குள் இழப்பீடு தொகை வழங்குவதாக, இன்சூரன்ஸ் அதிகாரிகள் கெஞ்சி கேட்டுக் கொண்டதை அடுத்து, நீதி மன்ற அமீனா ஜப்தி நடவடிக்கையை தள்ளி வைத்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications