திருப்பதி கோவிலில் விரைவு தரிசனத் திட்டம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ரூ. 300 கட்டி விரைவு தரிசனம் செய்யும் புதிய நடைமுறை திருப்பதி கோவிலில் தொடங்கி வைக்கப்பட்டது.
2 லட்டு இலவசம்...
நேற்று காலை இந்தத் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தொடங்கி வைத்தார். இக்கட்டணம் மூலம் சாமி தரிசனம் செய்பவர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏராளமான பக்தர்கள் இந்த விரைவு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருப்பதி கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோணி நட்சத்திரத்தன்று ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 26-ந் தேதி புஷ்பயாகம் நடக்கிறது.
இந்த யாகத்திற்கு மல்லிகை, ரோஜா, தாமரை, துளசி, வில்வம், மந்தாரம், உள்ளிட்ட 25 மலர்கள் பயன் படுத்தப்படும். இவற்றை பக்தர்கள் நன்கொடையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications