தேமுதிக மூத்த தலைவர் ஆஸ்டின் திடீர் நீக்கம்
சென்னை: தேமுதிகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ஆஸ்டின் திடீரென கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த துணை செயலாளர் எஸ். ஆஸ்டின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து மட்டும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முருகன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக சண்முக நாதன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
தே.மு.தி.க. நிர்வாகிகளான நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் அரவிந்தன், வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நித்தியா, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் லூயிஸ்ராஜ், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோரும் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடு விக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கட்சியின் துணைச் செயலாளர் பொறுப்பில் ஆஸ்டின் தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர் ஆஸ்டின் என்பது நினைவிருக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications