தமிழர் மறு குடியேற்றம்-இந்தியா மகிழ்ச்சி!
நியூயார்க்: இலங்கையில் தமிழர் மறுகுடியேற்ற நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதை விரைவுபடுத்தினால் நல்லது என்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கெளர் கூறியுள்ளார்.
நியூயார்க் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இதை விரைவுபடுத்துமாறு நாங்கள் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.
இன்னும் சில நாட்களில் இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்குள் மனிதாபிமான நடவடிக்கைகளை விரைவுபடுததுமாறு இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
மழைக்காலம் வந்தால் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கொள்ள அங்கு போதிய மருத்துவமனை வசதியும் இல்லை. எனவே அதற்குள் முகாம்களில் இருப்பவர்களை இடம் மாற்றுவது நல்லது. அவர்கள் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
இலங்கைக்கு சென்ற 10 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவின் பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தான் சொன்னபடி நடந்து வருகிறது. வாரந்தோறும் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு மறுகுடியேற்றம் செய்து வருகிறது.
நான் அக்டோபர் 16ம் தேதி இலங்கை சென்றிருந்தபோது கூட அன்றைய தினம் 2500 தமிழர்கள் திரும்ப அனுப்பப்பட்டு வந்தனர். விரைவில் 50 ஆயிரம் பேரை இலங்கை அரசு மறுகுடியேற்றம் செய்து விடும். இலங்கை சொன்னபடி செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார் கெளர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications