தேர்தல் தோல்வி-மக்கள் மீது பால் தாக்கரே பாய்ச்சல்!

தனது மகன் உத்தவ் தாக்கரேவை வளர்த்து விடுவதற்காக உறவினரான ராஜ் தாக்கரேவை பால் தாக்கரே ஒதுக்கியதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகி மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார்.
சிவசேனாவின் மண்ணின் மைந்தர்கள் பட்டத்தைப் பறிக்க, வட இந்தியர்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை நடத்தினார்.
இந் நிலையில் கட்சியை தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலை சந்தித்த ராஜ், சிவசேனாவின் வாக்குளை சிதறடித்து மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெல்ல வழி வகுத்தார்.
ஆனாலும் அவரை சிவசேனா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி மாநிலம் முழுவதும் 5.5 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது.
மும்பை, தானே உள்ளிட்ட சிவசேனையின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் 23.5 சதவீத வாக்குகளை வென்றுள்ளது.
குறிப்பாக மும்பையில் சிவசேனா 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது தான் பால் தாக்கரேவுக்கு விழுந்துள்ள மிகப் பெரிய அடியாகும்.
மொத்தத்தில் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் மேலும் 50 தொகுதிகளில் சிவசேனா-பாஜகவின் வாக்குகளை உடைத்து, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும் வெற்றிக்கு வழி வகுத்துவிட்டது.
இதன்மூலம் சிவசேனாவுக்கு பெரும் போட்டியாக ராஜ் உருவெடுத்துவிட்டார். இனி அடு்த்த தேர்தலில் இவருடன் கூட்டடணி வைக்க பாஜக முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு பாஜகவையும் பல தொகுதிகளில் 3வது இடத்துக்கு தள்ளியுள்ளது இவரது கட்சி.
விமானங்களில் பறந்து புகைப்படும் எடுக்கும் (ariel photography) 'ஹாபி'யைக் கொண்டவர் உத்தவ் தாக்கரே. யாரையும் மதிக்கவும் தெரியாது, தொண்டர்களை அரவணைக்கவும் தெரியாது. இவரை கட்சியின் செயல் தலைவராக்கியதில் இருந்தே சிவசேனா தேய ஆரம்பித்துவிட்டது.
அதே நேரத்தில் ராஜ் தாக்கரே, தொண்டர்களுடனேயே வாழும் அரசியல்வாதி. இதனால் பால் தாக்கரேவையும் மீறி சிவசேனா தொண்டர்கள் அவர் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
15 ஆண்டுகளாக அடுத்தடுத்து சட்டமன்றம், மக்களவைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வரும் சிவசேனா-பாஜக கலகலத்துப் போயுள்ளது.
இந் நிலையில் இன்று தனது சாம்னா பத்திரிக்கையில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
எதற்காக இந்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள் என்று புரியவே இல்லை. அப்படி அவர்கள் என்ன செய்துவிட்டார்கள், தந்துவிட்டார்கள்?.
ஊழல், மின் வெட்டு, தீவிரவாதம், நக்ஸல் தாக்குதல், விவசாயிகள் தற்கொலை இது தானே கடந்த 15 ஆண்டுகளாய் நடந்து வருகிறது.
சிவசேனா-பாஜகவுக்கு மக்கள் தோல்வியைத் தந்ததன் மூலம் இந்த மாநிலத்தை நரகத்துக்குள் தள்ளிவிட்டுவிட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போல மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை காங்கிரஸ் கடைபிடித்துள்ளது. மராட்டியர்களி்ன் வாக்குகளை (ராஜ் தாக்கரே மூலம்) பிரித்து ஆட்சிக்கு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
பிரமோத் மகாஜன் மகள் தோல்வி:
இந்தத் தேர்தலில் மேற்கு கட்கோபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனி் மகள் பூனம் ராவ் படுதோல்வி அடைந்தார்.
பாஜகவின கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், ராஜ் தாக்கரேவின் கட்சி வெற்றி பெற்றுவிட்டது.
ஜனாதிபதி மகன் வெற்றி:
காங்கிரஸ் சார்பில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் மகன் ராவ் ஷெகாவத் வெறும் 5,612 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்









Click it and Unblock the Notifications