கரூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலி!
கரூர்: கரூர் அருகே சாலையோர பள்ளத்தில் மாருதி ஆம்னி வேன் கவிழ்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 9 பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளப்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்ள மாருதி வேனில் வந்தனர்.
விழா முடிந்த பின் அனைவரும் சேலம் நோக்கி புறப்பட்டனர். பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் வழியில் மணல்மேடு என்னுமிடத்தை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர வாய்க்கால் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், அனைவரும் பலத்த காயமடைந்தனர். நான்கு பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். இரண்டு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நொறுங்கிக்கிடந்த வேன் இடிபாடுகளில் சிக்கியிருந்தோரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானவர்கள் நசருல்லா (46) ஆசிக்அலி (45) அப்துல் ஜப்பார் (56) கமால்பாஷா (65) அசின் (3) நசீமா (3) என்று தெரியவந்துள்ளது.
மற்ற மூன்று ஆண்கள் சுயநினைவிழந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் பெயர் விவரம் தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications