பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல்- 7 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்களும், தீவிரவாதிகளின் தாக்குதல்களும் பெருமளவில் அதிகரித்து விட்டன. கிட்டத்தட்ட தினசரி ஒரு தாக்குதல் நடந்து வருகிறது.
இன்று காலை பஞ்சாப் மாகாணம், கம்ரா என்ற நகரில், விமானப்படை வளாகத்திற்கு அருகே நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலும் பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்தே நடந்துள்ளதால் பாகிஸ்தான் அரசு பெரும் அச்சமடைந்துள்ளது.
இன்று காலை கம்ரா கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள விமானப்படை சோதனைச் சாவடியை நோக்கி ஒரு நபர் நடந்து வந்தார். அவரை பாதுகாப்புப் படையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் அந்த நபர் உள்பட 7 பேர் உடல் சிதறிப் பலியாயினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications