புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு!

அமெரிக்காவில் செட்டிலான இலங்கைவாசி, உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவர் ராஜ் ராஜரத்னம் சமீபத்தில் அமெரிக்க எஃப் பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவர் மீது நியூஜெர்ஸியில் வசிக்கும் சேர்ந்த 30 இலங்கையர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 2000 ஆண்டு தொடங்கி 2007 -ம் ஆண்டு வரை ராஜ்ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நிதியுதவி அளித்திருப்பதாகவும், இந்த நன்கொடைகளின் ஆதரவில் புலிகள் இயக்கம் இலங்கைக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்திய குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் தொடரப்பட்டுள்ளது.
மனித இனத்துக்கு எதிரான போருக்கு உதவியவர் என்ற வகையில் ராஜ் ராஜரத்னம் தண்டிக்கப்பட வேண்டும் என இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு ராஜ்ரத்னம் நிதி உதவி அளித்ததற்கு எந்த நேரடிச் சான்றும் கிடையாது. மேலும் அவர் பெயரும் நிதி அளித்தோர் பட்டியலில் இல்லை. 'பி எனும் தனி நபர்' அளித்த நிதி என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி உதவி வழங்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் தடை செய்யப்படாத இயக்கமாகவே இருந்தது தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
ஆகவே ராஜ்ரத்னம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும், அவரை எப்படியாவது தங்கள் பிடிக்குள் கொண்டுவர இலங்கை செய்யும் சதி இது என்றும் ராஜ்ரத்னம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications