ஸ்பெக்ட்ரம் ஊழல்-சென்னையிலும் சிபிஐ ரெய்ட்!

3 நாட்களுக்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கை பதிவு செய்ததது. இதைத் தொடர்ந்து அதிரடியாக அமைச்சர் ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய டெல்லி அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந் நிலையில் நேற்று 2வது நாளாக ரெய்டு தொடர்ந்தது. தொலைத் தொடர்புத்துறையின் சில இயக்குனரகங்கள், 10 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 19 அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்தது.
இதில் 10 தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகங்களும் அடங்கும்.
8 நகரங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் எந்தத் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் அல்லது தனியார் தொலைபேசி நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது என்ற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
டெல்லி, சென்னை தவிர மும்பை, ஜெய்ப்பூர், நொய்டா, குர்கான், அகமதாபாத், மொகாலி ஆகிய நகரங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து அடையாளம் குறிப்பிடாத அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
ஊழல் செய்தது, ஊழலுக்கு சதித் திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுக்களை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்துள்ளது.
இதனால் தொலைத் தொடர்புத் துறையில் பரபரப்பு கூடியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications