வேலை கிடைக்காத வேதனை- எம்சிஏ படித்த பெண் தற்கொலை
சென்னை: பொருத்தமான வேலை கிடைக்காத வேதனையில் 24 வயதேயான எம்.சி.ஏ படித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன சேலத்தைச் சேர்ந்தவர் ஜே. ரம்யா. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் எச்.ஆர். எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆனால் இந்த வேலையில் அவருக்கு பிடித்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இருந்து வந்துள்ள ரம்யா, நேற்று அண்ணா நகரில் தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது உறவினர் முத்துராமன் என்பவர் கூறுகையில், எச்.ஆர். வேலையில் திருப்தி இல்லாமல் இருந்து வந்தார் ரம்யா. அந்த வேலையையும் சமீபத்தில் விட்டு விட்டார். வேறு வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இந்த வேதனையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.
தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரம்யா. அவருடன் தங்கியுள்ள அனுஷா என்பவர் ஷாப்பிங் போய் விட்டு அறைக்குத் திரும்பியபோது அறை உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது ரம்யா தொங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்து அலறினார்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டனர்.
சேலம் வைஷ்ணவா கல்லூரியில் கடந்த ஆண்டுதான் எம்.சி.ஏ. முடித்தார் ரம்யா. இதையடுத்து வேலை தேடி சென்னைக்கு வந்தார்.
ரம்யாவின் தந்தை ஜெயராமன், இந்து அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
ரம்யாவின் உறவினரான கிருஷ்ணக்குமார் என்பவர் பேசுகையில், வெள்ளிக்கிழமை ரம்யா ஜெயராமனுடன் போனில் பேசினார். அப்போது அப்செட் ஆக இருந்தார். நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கூறினார். அதற்குள் இந்த முடிவை எடுத்து விட்டார் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications