திருவண்ணாமலை கோவிலில் தீபம் குறித்து வந்ததி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபம் அணைந்து விட்டதாக வதந்தி பரவியதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உண்மை இல்லை என்று கோவில் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.
நேற்று மாலை முதல் திருவண்ணாமலை கோவிலில் தீபம்
அணைந்து விட்டதாகவும், கோபுர கலசம் விழுந்து விட்டதாகவும் கொடிமரம் சாய்ந்ததாகவும் வதந்தி பரவியது.
திருவண்ணாமலையில் கிளம்பிய வதந்தி எஸ்எம்எஸ் மூலம் தமிழகம் முழுவதும் படுவேகத்தில் பரவியதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வதந்தியையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் தீபம் ஏற்றி குறை நிவர்த்தி- பரிகார பூஜைகளில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பலர் வீடுகளை கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே கோலமிட்டு நெய் விளக்கு, தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சிவன் கோயிலுக்கு சென்று குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டுமேன சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அந்த தீபத்தை வீட்டுக்குள் எடுத்து சென்று இரவு முழுவதும் அணையாமல் பார்த்து கொண்டனர்.
இந் நிலையில் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தனுஷ் கூறுகையில்,
திருவண்ணாமலை கோவிலில் அணையா விளக்கு என்பது எங்கும் இல்லை. தீபம் அணைந்து விட்டதாக கூறுவது வீண் வதந்தி. கர்ப்ப கிரகத்தில் உள்ள தூண்டாமணி விளக்கு அணைந்து விட்டதாகவும் வதந்தி பரவியுள்ளது.
மேலும் கோவிலில் உள்ள அணைத்து கோபுரங்களிலும் கலசங்கள் நல்ல நிலையில் உள்ளன. எந்த கலசமும் விழவில்லை. இதுபற்றி பரவும் வதந்திகளை பொதுமக்கள் பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications