ஆள் கடத்தல் -அடிதடியில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா நீக்கம் - மாவட்ட பொறுப்பாளரானார் தந்தை
சென்னை: ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை என்.கே.கே. பெரியசாமி ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆள் கடத்தல், அடைத்து வைத்து மிரட்டுதல், அடியாட்களை அனுப்பி தாக்கியது, நில அபகரிப்பு என சீரியஸான பல்வேறு புகார்கள் சிக்கினார் ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் சிவபாலன் என்பவருக்கும், ராஜாவுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. சிவபாலனை தனது வீட்டுக்கு அழைத்து ராஜாவும், அவரது 2வது மனைவி உள்ளிட்டோரும் தாக்கிப் படுகாயப்படுத்தியதாக சிவபாலன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வந்துதான் தன்னைக் காப்பாற்றியதாகவும அவர் கூறினார்.
ஆனால் சிவபாலன் தன்னையும், மனைவியையும் வெட்டினார் என்று ராஜா புகார் கொடுத்தார். இந்த வழக்கும் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா சில காலமாக கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மீறி நடந்துகொண்டதால் அவர் ஈரோடு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இன்று (25) முதல் விலக்கி வைக்கப்படுகிறார்.
ஈரோடு மாவட்ட தி.மு.க.வை தொடர்ந்து செம்மையாக நடத்துவதற்காக கட்சியின் விவசாய அணி தலைவர் என்.கே.கே.பெரியசாமி, ஈரோடு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் துணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி தோழர்கள் அனைவரும் பொறுப்பாளரோடும், துணைப் பொறுப்பாளரோடும் ஒத்துழைத்து, கட்சி பணிகளை ஆற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெரியசாமி, ராஜாவின் தந்தை ஆவார். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரை பதவியில் இருந்த திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications