தமிழனுக்காக குரல் கொடுப்போம்-சீமான்
திருச்செந்தூர்: தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை பிரச்சினை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் தமிழர் அமைப்பில் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசினார்.
திருச்செந்தூரில் நாம் தமிழர் அமைப்பு சார்பில் எழுச்சி கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு நிறுவனர் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழர்கள் சாதி, மதங்களால் பிளவுப்பட்டு கிடக்கின்றனர். தமிழர்களின் இன, மொழி விடுதலைக்காக நாம் தமிழர் அமைப்பு 2010ம் ஆண்டு மே 17ல் அரசியல் இயக்கமாக மாற்றப்பட உள்ளது.
இது மாறுபட்ட அரசியல் கட்சியாக செயல்படும். சட்ட கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இதில் இணைந்து வருகின்றனர்.
இலங்கையில் முள்வேலி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க தமிழகத்திலுள்ள காங்கிரஸ், திமுக எம்பிக்கள் சென்று வந்தனர். அங்கு சில தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்
தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைத்தால்தான் ஏற்றுக் கொள்ள முடியும். தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தவே நாம் தமிழர் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த அமைப்பில் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்கள். தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் இயக்கமாக விளங்கும் என்றார் அவர்.
பொதுக்கூட்டம்:
இந் நிலையில் அவர் தொடங்கியுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தீலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்துகிறார் சீமான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications