ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகார்களில் உண்மை இல்லை - பிரதமர்

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை தொடர்பாக தாய்லாந்தின் ஹுவா ஹின் நகரில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்திய செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,
அமைச்சரவை கூட்டத்தில் என்ன நடைபெற்றது? அல்லது அமைச்சருக்கும், எனக்கும் இடையே என்ன நடந்தது? என்பது போன்ற விவகாரங்களை பொது இடங்களில் வெளிப்படையாக விவாதிப்பது சரியல்ல.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாரில் உண்மை இல்லை. ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது வழக்கம்தான். ஆனால் அவை உண்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்றார்.
அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் புகார் குறித்து கேட்டபோது, அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுவது இல்லை. அதிலும், அன்னிய மண்ணில் இருக்கும் நிலையில், இந்த கேள்விக்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது என்றார் பிரதமர்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விதிமுறைப்படியே, குறிப்பாக பிரதமரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் ராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி திரும்பினார்..
தனது 3 நாள் தாய்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு இந்தியா திரும்பினார்.
தனது 3 நாள் பயணத்தின்போது சீனப் பிரதமர் வென் ஜியாபோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அருணாச்சல் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, தலாய் லாமா இந்தியாவின் கெளரவத்துக்குரிய விருந்தினர். அவர் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியும் என்பதை செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சீனப் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
மேலும், ஜப்பான் பிரதமர் யூகியோ ஹடயோமாவுடனும் பிரதமர் பேச்சு நடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications