தெல்கியிடம் பணம் பெற்றார் அசோக் சவாண்?

ஒவ்வொரு கட்சியும் தவறாமல் கேட்கும் துறைகளில் ஒன்று கப்பல் துறை. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இந்தத் துறை திமுக வசம் இருந்தது. டி.ஆர்.பாலு இதன் அமைச்சராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் படு வேகம் காட்டப்பட்டது.
தற்போது இந்தத் துறை ஜி.கே.வாசனிடம் உள்ளது. ஆனால் அவர் அமைச்சராக இருக்கிறாரே என்று சந்தேகப்படும் அளவக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தனைக்கும் பெரும் பணம் கொழிக்கும் துறை இது. இந்த முறையும் திமுகவே இந்தத் துறையைக் கேட்டது. ஆனால் காங்கிரஸ் தர மறுத்து விட்டது. ஜி.கே.வாசன் கேட்காமலேயே இந்தத் துறையைத் தூக்கிக் கொடுத்தது காங்கிரஸ் மேலிடம். ஆனால் அவரோ கடலில் கரைத்த பெருங்காயம் போல சத்தமே இல்லாமல் இருக்கிறாராம்.
7,517 கி.மீ தூரம் கடற்கரையைக் கொண்ட இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி, காண்ட்லா, மங்களூர், கொச்சி உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் கப்பல் துறையின் ஆளுகையில் உள்ளன.
இந்திய கப்பல் கழகம், கடல்சார் பல்கலைக் கழகம், சேது சமுத்திர திட்ட கழகம், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களும் உள்ளன.
இவைகளில் அறங்காவலர்களாக அல்லது உறுப்பினர்களாக தாங்கள் நியமிக்கப்படலாம் என வாசன் ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் வாசன் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை ஒருவரையும் இதுபோன்ற பதவிகளில் நியமிக்கவில்லை.
சென்னை துறைமுக டிரஸ்டிகளாக தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். இவர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்களையும் வாசனால் ரத்து செய்ய முடியவில்லையாம். அந்த அளவுக்குத்தான் அவரது 'பவர்' உள்ளது என்கிறார்கள்.
அமைச்சராகப் பதவி ஏற்ற வாசன், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தலா ஒரு முறை சென்றுள்ளார். இது தவிர நாட்டின் எந்த ஒரு துறைமுகத்துக்கும் பதவி ஏற்றதிலிருந்து செல்லவில்லை. சென்னைத் துறைமுகத்துக்கு வருமாறு அழைத்தும் இதுவரை ஒருமுறைகூட வரவில்லை. எந்த ஒரு உயர் அதிகாரியும் வீட்டுக்கு வரக் கூடாது, துறைமுகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவரும் தனது சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என வாசன் கூறிவிட்டாராம்.
துறைமுக வாகனங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் வாசன் உபயோகிப்பது இல்லை எனத் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வணிகம் 95 சதவீதம் துறைமுகங்கள் மூலம்தான் நடைபெறுகிறுது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வம் அமைச்சர் வாசனுக்கு முதலில் இருந்தது உண்மை.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான துறைமுகங்களில் 'அதிகார மையங்கள்' செய்துள்ள பதவி நியமனங்கள், முறைகேடான ஒதுக்கீடுகள் என எங்கு பார்த்தாலும் 'கோடிகளாக'வே புரளுவதை பின்னர்தான் அவர் தெரிந்து கொண்டார்.
இதேபோல் சென்னைத் துறைமுக தலைவர் பதவியை நியமிப்பதில் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டியால் இப்பதவி இதுவரை நிரப்பப்படவில்லை.
தனது தந்தை ஜி.கே.மூப்பனாரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த வாசன் எவ்வித புகாருக்கும் ஆளாகக்கூடாது, குடும்ப பாரம்பரியத்திற்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். ஆனால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என புரையோடிப் போனது கப்பல் துறை.
பேசாமல் இந்தத் துறையை கொடுத்து விட்டு சாதாரண ஒரு துறையை வாங்கிக் கொண்டு, மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவராகி விட வேண்டும். தமிழக அரசியலே தனக்குப் போதும் என்ற எண்ணத்தில் வாசன் இருப்பதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications