நில ஒதுக்கீட்டில் மோசடி: விஜய் உள்ளிட்டோர் மீது வழக்கு
சென்னை: கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நடிகர் விஜய்க்கு 5 கிரவுண்டு நிலத்தை (27 சென்ட் நிலம்) ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவு மோசடியானது என்றும் இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை செனாய்நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
என்னுடைய தந்தை ரத்தினப் பாண்டியனுக்கு பாடி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருந்தது. கொரட்டூரில் குடியிருப்புகள் அமைப்பதற்காக 1969-ம் ஆண்டு அப்பகுதியில் தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்தது. அதன்படி என்னுடைய தந்தையாரும், தனது 6 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
கடந்த 34 வருடங்களாக எனது தந்தை வழங்கிய நிலத்தில் 6 கிரவுண்டு நிலம் மட்டும் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களுக்கே அந்த நிலங்களை திரும்ப தந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் என் அம்மா சரஸ்வதி மற்றும் சகோதர சகோதரிகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம், பயன்படுத்தப்படாத எங்கள் நிலத்தை திரும்ப வழங்கக் கோரி முறையிட்டனர். ஆனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் எங்கள் நிலத்தை திரும்பத் தரவில்லை.
எனவே 2007-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் எனது தாயார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் என்னுடைய தாயாரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின்னர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனுப்பிய பதிலில் என் தாயாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறிவிட்டது.
எங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பகுதி அம்பத்தூர் நகராட்சிக்கு சாலை அமைப்பதற்காகவும், ஒரு பகுதி நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்காகவும், மீதமிருந்த 0.38 ஏக்கர் நிலம் 2004-ம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய்க்கு...
ஆனால் 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலியாக இருந்த அந்த 6 கிரவுண்ட் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடந்தது. இது பற்றி நாங்கள் விசாரித்தபோது அந்த நிலம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இது பற்றி விசாரித்ததில் காலியாக இருந்த 0.38 ஏக்கர் நிலத்தில் 0.27 ஏக்கர் நிலம் அதாவது சுமார் 5 கிரவுண்ட் நிலம் நடிகர் விஜய்க்கு 2007-ம் ஆண்டு விற்கப்பட்டதாக எங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
2004-ம் ஆண்டே அந்த நிலத்தை திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒப்படைத்ததாக கூறிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 3 ஆண்டுகள் கழித்து எப்படி அதனை நடிகர் விஜய்க்கு விற்க முடியும்?
மேலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய விதிமுறைகளின்படி ஒரு தனி நபருக்கு ஒரு கிரவுண்ட் அல்லது 5 சென்ட் நிலத்தை மட்டுமே தர முடியும். ஆனால் நடிகர் விஜய் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி 0.27 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் எங்கள் கோரிக்கையை சட்ட விரோதமாக நிராகரித்துள்ளது. எனவே நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 5 கிரவுண்ட் நிலத்தை ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு மோசடியானது.
இது சட்ட விரோதம் என்று அறிவித்து அந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அத்துடன் அந்த இடத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதற்கும் தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உடனடியாக விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஜய் உள்ளிட்டவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாகவும் நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications