அதிகாரிகள் காலில் விழ சத்தியாகிரக குழுவுக்கு அனுமதி மறுப்பு
வேலூர்: லஞ்ச ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சத்தியாகிரகக் குழுவினர் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து தங்களது கோரிக்கையை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணவேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சத்தியாகிரக பிரச்சார குழுவிவைச் சேர்ந்த ஐந்து பேர் மணி என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில், வரும் 2015ல் இந்தியாவை வல்லரசு நாடு ஆக்க நாட்டில் உள்ள லஞ்சம், ஜாதிப்பிரச்னைகளை ஒழிக்கவும் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல தரப்பட்ட மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் காலில் விழுந்து வணங்கி கேட்டு வருகின்றோம். எங்கள் குழுவுக்கு, "சத்தியாகிரகம்' என பெயரிட்டுள்ளோம்.
இதே போல லஞ்சத்தை ஒழிக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் காலில் விழுந்து வணங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜேந்திரன், இந்த நோட்டீஸை அனைத்து அதிகாரிகளுக்கும் நானே கொடுத்து விடுகின்றேன். ஆனால், இங்கு யாருடைய காலிலும் விழ வேண்டாம் என்றார்.
இதையடுத்து சத்தியாகிரகக் குழுவினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications