'நவீன நெற்றிக்கண்' ஆசிரியர் மணி கைது
சென்னை: 'நவீன நெற்றிக்கண்' பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். மணி, அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு சர்வதேச பத்திரிகைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நவீன நெற்றிக்கண் இதழில், சமீபத்தில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, காண்டிராக்டர் சுரேஷ் ஆகியோர் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் சாலை காண்டிராக்ட் பணியில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
காண்டிராக்ட் கொடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சதவீதத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும், அதேபோல தென் மாவட்டங்களில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுரேஷ் பரிந்துரைக்கும் நபர்களே இடம் பெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சுரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அக்டோபர் 25ம் தேதி ஆசிரியர் மணி கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கைதுக்கு சர்வதேச பத்திரிகைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச பத்திரிக்கையாளர் கழகத்தின் வாரிய உறுப்பினரும், இந்து நாளிதழின் எடிட்டருமான என்.ரவி கூறுகையில், மணி மீது ஜாமீனில் வெளி வர முடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது, சட்டத்தைப் பயன்படுத்தி அவரை ஒடுக்க தமிழக அரசு முயல்வதையே காட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, சர்வதேச பத்திரிக்கையாளர் சம்மேளனமும் மணி கைதைக் கண்டித்துள்ளது.
சிறையில் சித்திரவதை...
இந்த நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட மணி அங்கு தன்னை சித்திரவதை செய்ததாக கூறிய புகாரைத் தொடர்ந்து அவர் தற்போது சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications