டீலர்களுக்கான கமிஷனை உயர்த்துவதற்காக மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னை: டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்தித் தருவதற்காக நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி, புதுச்சேரியில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் டீசல் விலை 5 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷனை உயர்த்துவதற்காக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டணம்...
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.48.65 (பழைய விலை ரூ.48.58), ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.51.15 (பழைய விலை ரூ.51.10), ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.35.02 (பழைய விலை ரூ.34.98), ஹை ஸ்பீடு டீசல் ஒரு லிட்டர் ரூ.37 (பழைய விலை ரூ.36.90) ஆகும்.
கோவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.48.69, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.35.36, மதுரை ரூ.48.93, ரூ.35.61, திருச்சி ரூ.48.80, ரூ.35.48, திருநெல்வேலி ரூ. 48.72, ரூ.35.39.
புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 42.59, ஒரு லிட்டர் டீசல் ரூ.33.63. ஆகும்.












Click it and Unblock the Notifications