சென்னையிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அக்கம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0611) மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 4-ந் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் ஆகியவை இந்த சிறப்பு ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
சென்டிரல்-திருச்செந்தூர் இடையே வாரம் தோறும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0659) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அக்டோபர் 31-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதே போல் மறுமார்க்கத்தில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications