லண்டனில் தமிழக வாலிபர் அடித்துக் கொலை- இனவெறித் தாக்குதலா?
சேலம்: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. படித்த இளைஞர், லண்டனில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை தமிழகத்திற்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆரியூர் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். விவசாயி.
இவரது மனைவி பெயர் பாப்பாயி. இவர்களுக்கு சிவகாமி, விஜயா, அருள்கொடி, கவிதா என்ற 4 மகள்களும், சரவணகுமார் (26) என்ற ஒரு மகனும் இருந்தனர்.
சரவணகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. எம்.பி.ஏ. படித்துள்ள சரவணகுமார் , லண்டனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி அன்று, வேலைக்கு சென்று திரும்பிய சரவணகுமாரை, மர்ம ஆசாமிகள் சிலர் அடித்துக்கொலை செய்து விட்டதாக அங்கிருந்து தகவல்கள் வந்தது. இதை அறிந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்லப்பன் கூறுகையில்,
தீபாவளி அன்று இரவு சரவணகுமாரின் நண்பர்கள் சிலர் எங்களது வீட்டிற்கு லண்டனில் இருந்து டெலிபோன் செய்தனர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்று திரும்பிய சரவணகுமாரை, மர்ம நபர்கள் 3 பேர் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை திருடி சென்று விட்டதாக கூறினர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சரவணகுமாரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும், பின்னர் அறைக்கு கொண்டுவந்தபோது, வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வந்து சரவணகுமார் இறந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்டதும் எங்கள் இதயமே நின்று விட்டது என்று கூறி அழுதார்.
சரவணகுமார் உடலை, இங்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சரவணக்குமாரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications