இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிய இந்தியா சிமெண்ட்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தோனேஷியாவில் ரூ.100 கோடி மதிப்பில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.
இந்த டீலுக்கான தொகை முழுவதும் பங்குகளாக கைமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுரங்கத்திலிருந்து அடுத்த ஆறுமாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் துவங்கிவிடுவோம் என இந்தியா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது. அதன்பிறகு மாதம் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமாம்.
கடந்த காலாண்டில் டன் ஒன்று 83 டாலர் எனும் விலையில் 60 சதவிகித நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தது இந்தியா சிமெண்ட்ஸ். மீதியை இந்தியாவில் உள்ள சிங்கரேணியிலிருந்து பெற்றது.
இந்த ஆண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் திட்டமிட்டுள்ள முதலீட்டுச் செலவு ரூ.1500 கோடி. இதில் இதுவரை ரூ.530 கோடி செலவிடப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications