டெல்லி: 'பிச்சைக்காரர்களை அகற்ற கூடாது'
டெல்லி: தலைநகர் டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைளை அது கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியை விட்டு சொந்த மாநிலங்களுக்குப் போகுமாறு பிச்சைக்காரர்களை விரட்டிய டெல்லி அரசின் செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்றும் அது கடுமையாக சாடியுள்ளது. டெல்லி அரசின் செயலுக்கும், மும்பையிலிருந்து வட மாநிலத்தவரை வெளியேற்ற மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா செய்த செயலுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்றும் அது வர்ணித்துள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முரளீதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், வறுமை என்பது குற்றமல்லல. பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது.
அப்படிச் செய்வது மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும். பிறகு உங்களுக்கும் (டெல்லி அரசுக்கும்), மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
ஒரு குற்றவாளி தலைநகரில் தங்கியிருக்கலாம், வாழலாம், குற்றச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடலாம். ஆனால் உயிர் வாழ்வதற்காக பிச்சை எடுப்போர் இந்த நகரில் வாழக் கூடாது என்பது விசித்திரமாக உள்ளது என்றும் டெல்லி அரசுக்கு கடும் சூடு போட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications