போலி சிபிஐ-வருமான வரி 'அதிகாரிகள்' கைது!
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம், நகைளை சுருட்டி வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக போலி அடையாள அட்டைகளைக் காட்டி, வருமான வரித்துறை, சிபிஐ அதிகாரிகள் என்று கூறிகொண்டு நிறுவனங்கள், வீடுகளில் ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது.
சமீபத்தில் பூக்கடை மூர் தெருவில் ஏ.சி விற்கும் கடையிலும் இதே போல 'ரெய்ட்' போன இக் கும்பல் கடையில் இருந்த ரூ.3.5 லட்சம் பணத்துடன் தப்பியது.
இதையடுத்து பூக்கடை துணைக் கமிஷனர் பெரிய்யய்யா துறைமுகம் உதவி கமிஷனர் மரிய ஜார்ஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், குணவர்மன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையினர் தீவிர விசாரணை நடத்தி சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த முகம்மது காஜி (34), நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானைச் சேர்ந்த கணேஷ் (48), ஓட்டேரியைச் சேர்ந்த பாஸ்கர் (31), உத்தமப்பாளையத்தைச் சேர்ந்த முரளி (48), திருமுல்லைவாயலைச் சேர்ந்த ம், 5. பாஸ்கர் (27) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.1.6 லட்சம் பணம், போலி வருமான வரி. சிபிஐ அடையாள அட்டைகள், சோதனை போடுவதற்கான போலி சான்றிதழ்கள், கை விலங்குகள், சிபிஐ, வருமான வரித்துறை ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கணேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
நான் கடந்த 9 ஆண்டுகளாகவே வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தேன் என்று கூறியுள்ளான். ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ள இவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications