தமிழக அதிகாரிகளை தடுத்த கேரள வனத்துறை
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பணிகளை மேற்கொள்ள விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள வனத்துறையினர் மீண்டும் தடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் 999 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அணையின் நீர்மட்டத்தை அறியவும், பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் தமிழக பொதுப்பணித்துறை- நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தினமும் பெரியாறு அணைக்கு செல்வது வழக்கம்.
தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்த படம் பிடிப்பதும் வழக்கம். அதற்காக புகைப்பட கலைஞரையும் உடன் அழைத்து செல்வர்.
நேற்று வழக்கம்போல பெரியாறு அணைக்கு செல்ல செயற் பொறியாளர் ராஜேஷ், 2 உதவி செயற் பொறியாளர்கள், புகைப்பட கலைஞர் ஆகியோர் தேக்கடி படகுத்துறைக்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். தற்போது கேரள அரசு சார்பில் முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே எடுக்கும் பணி நடந்து வருவதால், நீங்கள் போகக் கூடாது என்றனர்.
மேலும் புதிய அணைக்கான சர்வே நடப்பதை படம் பிடிக்கவே நீங்கள் செல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினர்.
அணையின் நீர்மட்டத்தை அறியவே *செல்வதாக தமிழக அதிகாரிகள் கூறியும் கேரள வனத்துறையினர் அதனை ஏற்க மறுத்து தடுத்து நிறுத்தினர்.
பல மணி நேரம் கேட்டும் விடாததால் தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இது தொடர்பாக அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications