5ம் தேதி என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
நெய்வேலி: என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வரும் 5 ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பாக கடந்த 8 ம் தேதி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுசவும், பாட்டாளி தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன.
அங்கீகரிக்கப்படாத சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஒப்பந்தத்தை மாற்றக்கோரி தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கமும், வேலை நிறுத்தம் செய்வது குறித்த வாக்கெடுப்பும் நடத்தினர். இதில், வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களித்தனர்.
இதனையடுத்து, கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சிஐடியு தலைவர் குப்புசாமி தலைமையில் நடந்தது. இதில், எச்எம்எஸ் , அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்ட முடிவில் ஸ்டிரைக்கை வலியுறுத்தி வரும் 1, 2 ம் தேதிகளில் வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும், 5 ம்தேதி இரவு பொதுக் கூட்டம் நடத்தி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடுவது என்றும், அன்று இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications