கொல்லப்பட்ட குட்டி வீரப்பனின் உடல் தோண்டி எடுப்பு
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ராஜு என்கிற குட்டி வீரப்பனின் உடலை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர்.
வீரப்பனின் குழுவில் இடம் பெற்றிருந்தவர் ராஜு. இவருக்கு குட்டி வீரப்பன் என்ற பெயரும் உண்டு. 2 நாட்களுக்கு முன்பு குட்டி வீரப்பனை அடையாளம் தெரியாத சிலர் கொலை செய்தனர்.
அவரது உடலை கல்ராயன் மலைப் பகுதியில் புதைத்து விட்டனர். இதுகுறித்து குட்டி வீரப்பனின் மகன் சுரேஷ்குமார் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் கல்ராயன் மலைப் பகுதியில் குட்டி வீரப்பன் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உடலை தோண்டி எடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குட்டி வீரப்பன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை முடிந்து கடந்த வாரம்தான் விடுதலையானார். ஆனால் தன் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையி்ல்தான் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications