முந்தைய பாஜக ஆட்சியில் திமுகவும் இருந்ததை மறந்து விட்டாரா ராசா? - விஜயகாந்த்
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய தி.மு.க. அமைச்சர் ராசாவின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அலுவலகத்தில், இதுவரை இல்லாத முறையில் மத்திய புலனாய்வுத்துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்துள்ளது. இந்த அமைச்சகத்தின் அலைக்கற்றை வழங்கியதில் இந்திய அரசுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏன் ஏலம் விடப்படவில்லை..?
இந்த அலைக்கற்றை ஏன் ஏலத்திற்கு விடப்படவில்லை? அதற்கு பதிலாக யார் முதலில் மனு கொடுத்தார்களோ அந்த வரிசையில் சந்தை நிலவரத்தைப் பார்க்காமல் லைசென்ஸ் வழங்கியது ஏன்? 2001-ம் ஆண்டில் ஏல முறை இதே துறையால் கையாளப்பட்டுள்ளதை மறைப்பது ஏன்?
நான் தவறே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் ராசா வாதிடுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சியினர் புகார் சொல்வதும், அது விசாரிக்கப்படுவதும் இயற்கை தான் என்கிறார்.
மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதித்ததே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பதனால் தான். பிரதமரும், நிதி அமைச்சரும் மறுப்பது விசாரணைக்கு குந்தகம் ஏற்படாதா? மத்திய அரசு ஊழலை ஒழிக்கும் லட்சணம் இதுதானா?
மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை.
பிரதமர், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை பதவி நீக்கம் செய்து முறையான விசாரணை நடத்த வழிவகுப்பாரா? என்ற நல்ல தீர்ப்பை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications