கர்நாடக சிக்கல்: டெல்லியில் பேச்சு-புதிய 'சமாதான பார்முலா'!
டெல்லி: கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரெட்டி சகோதரர்கள் தலைமையிலான அதிருப்தியாளர்கள் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியுள்ளனர்.
ஆனால், கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த புதிதி்ல் எதியூரப்பாவுக்கு மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கி, பாஜகவுக்கு கட்சி தாவ வைத்த ரெட்டிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் வேறு வழிகளை ரெட்டி சகோதரர்கள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
டெல்லியில் ரெட்டி கோஷ்டி:
கர்நாடக பாஜகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இப்போது டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை வகிக்கும் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் இன்று டெல்லிக்கு வந்து அத்வானி, அருண் ஜேட்லி, தங்களுக்கு முழு ஆதரவு தந்து வரும் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவுள்ளனர்.
இந் நிலையில் நேற்று இவர்களால் முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டுள்ள கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் தலைமையி்ல் சில மூத்த எம்எல்ஏக்கள் ஜேட்லி-சுஷ்மா- ராஜ்நாத்தை சந்தித்தனர்.
எதியூரப்பா கோஷ்யும் வந்தது:
அதிருப்தி கோஷ்டி டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தனது தரப்பு நிலையை எடுத்துச் சொல்ல அமைச்சர்கள் ஆச்சார்யா, கட்டா சுப்பிரமணிய நாயுடு, அசோக் உள்ளிட்ட மூத்த தலைவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் எதியூரப்பா.
எதியூரப்பாவும் வருகிறார்:
இவர்களும் ஜேட்லி-சுஷ்மா- ராஜ்நாத்தை சந்தித்து எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கூடாது என வலியுறுத்தினர். மேலும் இவர்கள் அத்வானியையும் சந்தித்தனர்.
இந் நிலையில் நாளை எதியூரப்பாவும் டெல்லி செல்கிறார்.
அனந்த்குமாரின் 'உள்குத்து':
எதியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் மகிழ்ச்சியடைந்துள்ள கர்நாடக மாநில மூத்த பாஜக தலைவரான அனந்த்குமார் (இவருக்கு டெல்லி தலைமையிடம் செல்வாக்கு அதிகம். காரணம், இவர் ஆர்எஸ்எஸ்சின் முழு ஆசிர்வாதம் பெற்றவர்) டெல்லியில் முடிந்த அளவுக்கு தன் 'உள்குத்து' வேலைகளை செய்து வருகிறார்.
எதியூரப்பாவுக்கு எதிரான நிலை எடுத்துள்ளவர்களை இவர் இதுவரை விமர்சிக்கவில்லை. அதே நேரத்தில் பொதுவான ஆள் போல வெளியில் நடிக்கும் அனந்த்குமார், எதியூரப்பா எதிர்ப்பாளர்களுக்கு மறைமுக ஆதரவு தந்து வருகிறார்.
ஜாதிரீதியில் அணி திரளும் எம்எல்ஏக்கள்:
அவரும் டெல்லியில் மூத்த தலைவர்களை தனியே சந்தித்து வருவதால் எதியூரப்பா அதிர்ந்து போயிருந்தாலும், தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் அடுத்து வேறு யாரும் ஆட்சியமைத்துவிட முடியாத வகையில் தனது சமூகததைச் சேர்ந்த எம்எல்ஏக்களை (இவர் முற்பட்ட லிங்காயத்து ஜாதியை சேர்ந்தவர்) முழு அளவில் வளைத்து வைத்துள்ளார்.
எதிர்கோஷ்டி வசம் 60 எம்எல்ஏக்கள், எதியூரப்பா வசம் 35 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இன்னொரு 35 பேர் நடுநிலை வகித்து வருகின்றனர்.
காங்கிரசுக்கு தூது:
இதனால் எந்த கோஷ்யும் ஒரு கோஷ்டியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் தொடரவோ, புதிதாக ஆட்சியமைக்கவோ முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் இதில் எந்த கோஷ்டி காங்கிரசுடன் சேர்ந்தாலும் ஆட்சியமைக்க முடியும்
இதனால் தான் காங்கிரசுக்கு தூது அனுப்பியுள்ளனர் ரெட்டி சகோதரர்கள். ஆனால், பாஜக விஷயத்தில் மூக்கை நுழைத்து அந்தக் கட்சியின் உட்கட்சிப் பூசலுக்கு நாம் தான் காரணம் என்ற பெயரை பெற்றுவிடக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது.
நிராகரித்த காங்கிரஸ்:
அவர்களாகவே கவிழ்ந்தால், இப்போதுள்ள கோஷ்டிப் பூசலால் அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கும் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் யாருக்கும் எந்தவிதமான ஆதரவும் இல்லை என்று காங்கிரஸ் கூறிவிட்டது.
இந் நிலையில் எதியூரப்பாவை முதல்வர் பதவிலியிலிருந்து நீக்க முடியாது. அதே நேரத்தில் உங்களது மற்ற எல்லா கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் என்று அதிருப்தியாளர்களிடம் பாஜக தலைமை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய 'சமாதான பார்முலா':
இதனால் எதியூரப்பாவின் அதிகாரம் பெருமளவு பறிக்கப்பட்டு, ரெட்டிகள் சொல்லும் நபர்கள் துணை முதல்வர்களாக, முக்கிய அமைச்சர்களாக நியமிக்கபட்டும், ரெட்டிகளுக்கு ஆகாத ஷோபா உள்ளிட்ட சில அமைச்சர்கள் நீக்கப்பட்டும் ஓரிரு நாளில் சிக்கல் தீர்க்கப்படலாம் என்கிறார்கள்.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் பாஜகவுக்கு 117 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 74 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 27 உறுப்பினர்களும், 6 சுயேச்சைகளும் உள்ளனர்.
ஆட்சியமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
அம்மா, அக்கா கழுத்தை அறுத்து கொன்ற பெங்களூர் இளைஞர்.. கடன் பிரச்சனையால் தானும் தற்கொலைக்கு முயற்சி! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்












Click it and Unblock the Notifications