கேரள மாணவர்களின் சதி அம்பலம்- நெல்லை கல்லூரியில் கொலை தவிர்ப்பு
நாகர்கோவில்: நெல்லை பொறியியல் கல்லூரியில் உடன் பயிலும் மாணவனைக் கொல்ல கேரள மாணவர்கள் தீட்டிய சதி அம்பலமானது. போலீஸ் சோதனையில் அரிவாள், கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், நமது கல்லூரி கேன்டீன் அருகில் வைத்துதான் அவனை அரிவாளால் வெட்ட வேண்டும். சத்தம் வெளியே வராமல் பார்தது கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் வடசேரி பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வடசேரி பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் தங்களை நோக்கி வருவதை அறிந்ததும் கும்பலாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் தங்கள் கையிலிருந்த பைகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர்கள் விட்டு்ச் சென்ற 10 பைகுகளை போலீசார் சோதனை செய்தபோது அதில், அரிவாள்கள், கத்திகள், ஒரு லேப்டாப் கம்யூட்டர் ஆகியவை இருந்தன.
மேலும் அதிலிருந்த புத்தகங்கள், மற்றும் ஆவணங்களை சோதித்து பார்த்ததில் அவர்கள் அனைவரு்ம் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.
உடன் பயிலும் யாரையோ கொல்லும் திட்டத்துடன் இருந்த இவர்களது சதி போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications