என்.கே.கே.பி ராஜாவை பிடிக்க தனி்ப்படை-பாஸ்போர்ட் முடக்கம்
கோவை: நில அபகரிப்பு, ஆள் கடத்தல், அடிதடி என பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். இவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சாம்பசிவம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நில அபகரிப்பு, ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 30 பேர் மீது ஏற்கனவே சிபிசிஐடி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
பெருந்துறை சிவபாலனை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, அவரது இரண்டாவது மனைவி உமா மகேஸ்வரி உள்பட 6 பேர் திடீரென தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடி வருகிறோம்.
இதில், உமா மகேஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு வருகிறது. இப் பணி முடிந்ததும் அவற்றை முடக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
எம்.எல்.ஏ. ராஜாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம். ஆனால் எங்கு பதுங்கி இருக்கிறார் என தெரியவில்லை. விரைவில் பிடித்து விடுவோம்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது துப்பாக்கி லைசென்சை ரத்து செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications