விடுதலை சிறுத்தையில் போலி டாக்டர்!
கடலூர்: கடலூரில் போலி டாக்டராக பணியாற்றி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்திய மருத்துவ கவுன்சில் கடலூர் மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு கொடுத்தனர்.
இதனையடுத்து, போலி டாக்டர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.பி-க்கு பரிந்துரைத்தார்.
இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கடலூர் முத்துநகர் சாளக்கரையில் உள்ள முத்தரசன், செல்லங்குப்பத்தில் உள்ள மதியழகன் ஆகியோரது அறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் முத்தரசன் எம்பிபிஎஸ், ஆர்த்தோ மெடிசன் படித்துள்ள தாகவும், மதியழகன் பீபிடி (முட நீக்கியல் இளங்கலை) எம்ஐஏபி, டிஎம்டி, பிஏஎஸ்எம் ஆயுர்வேதிக் படித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களிடம் சிகிச்சை அளிக்க உரிய அங்கீகாரம் இல்லை என்பதால் போலீசார் அந்த இருவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களது மருவத்துவ மனையில் இருந்த மருந்து பொருட்கள், மருத்துவ சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் மதியழகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மருத்துவர் அணி கடலூர் மாவட்ட துணை செயலாளர் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications