பல்கேரியாவில் 11 வயதில் தாயான சிறுமி

பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது வயது 19) கோர்டஸாவைக் காப்பாற்றி மீட்டார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. கல்யாணமும் செய்து கொண்டனர். இப்போது அழகான குழந்தைக்குத் தாயாகியுள்ளார் கோர்டஸா. அக்குழந்தைக்கு வயலட்டா என்று பெயரிட்டுள்ளனர் டிமிட்ரோவ் - கோர்டஸா தம்பதி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டஸா தனது கல்யாண தினத்தன்று பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு 2.49 கிலோ எடையுடன் கூடிய குழந்தை பிறந்தது. அன்று இரவு மருத்துவமனையில் கழித்த கோர்டஸா காலையில் தனது திருமண உடை அணிந்து கணவருடன் இணைந்து தனது முதல் திருமண நாளை கொண்டாடினார்.
ஸ்லிவன் நகரில் சிறு வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லையாம். 13 வயதில் தாயான பல சிறுமிகள் அங்கு உள்ளனர். ஆனால் 11 வயதில் குழந்தை பெற்ற முதல் சிறுமி கோர்டஸாதானாம்.
தாயானது குறித்து கோர்டஸா கூறுகையில், நான் அம்மாவானதும், எனக்குக் குழந்தை பிறந்திருப்பதும் வினோதமாக உள்ளது.
பொம்மைகளுடன் விளையாடும் எனக்கு இப்போது இந்தப் புதிய பொம்மை கிடைத்துள்ளது. இவள் அழகாக இருக்கிறாள், இவளை நான் நேசிக்கிறேன். வயலட்டா சிறு குழந்தை, அவளை நன்றாக வளர்க்க வேண்டும். நான் அம்மாவாகி விட்டதால் இனிமேல் பள்ளிக்குப் போக மாட்டேன் என்றார்.
அம்மா ஆன சந்தோஷத்தில் கோர்டஸா இருந்தாலும் அவரது கணவரான டிமிட்ரோவுக்கு ஒரு பிரச்சினை காத்திருக்கிறது. மைனர் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதால் டிமிட்ரோவ் மீது வழக்கு தொடரப்படும். அந்த நாட்டுச் சட்டப்படி மைனர் வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டால் 6 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம்.
முதன் முதலில் நாங்கள் டேட்டிங் சென்றபோது கோர்டஸாவுக்கு 15 வயதாகும் என நினைத்தேன். அவளும் தனது வயது என்ன என்பதைச் சொல்லவில்லை என்கிறார் டிமிட்ரோவ்.
கோர்டஸா கர்ப்பம் தரித்தபோது அதுகுறித்து அவருக்குத் தெரியவில்லை. அவரது பாட்டிதான் கோர்டஸாவின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்துக் கண்டுபிடித்துக் கூறினாராம்.
நிறைய பர்கர் சாப்பிட்டதால் எனது உடல் பருமன் கூடியதாகத்தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் எனது பாட்டிதான் நீ கர்ப்பமாகியுள்ளாய் என்று தெரிவித்தார் என்கிறார் சிரித்தபடி.
பர்கர் சாப்பிட்டதால் பருமனா.. கலி முத்திடுத்து..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications