கோத்தபயாவிடம் செப்டம்பரிலேயே விசாரணை நடத்திய யு.எஸ்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இலங்கைக் குழுவில் கோத்தபயா ராஜரக்சேவும் இடம் பெற்றிருந்தார்.
அப்போது அவரிடம், அமெரிக்க குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்த தகவல்கள் மீடியாக்களுக்கு வழங்கப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இத்தகவலை இலங்கை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய அமெரிக்காவுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை.
வெளிநாட்டு சக்திகள், இலங்கையின் ராணுவ வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்றார்.
கோத்தபயாவை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை நடத்தியதை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தகவல் தர வேண்டாம்- பொன்சேகாவுக்கு உத்தரவு
இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகளின் விசாரணையின்போது எந்த உண்மையையும் தெரிவிக்கக் கூடாது என்று சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.
அப்படிக் கூறும் உரிமையும் அவருக்கு இல்லை என்றும் அரசு அவரிடம் தெளிவுபடுத்தியுள்ளதாம்.
இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா பேசுகையில்,
பாதுகாப்பு சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் போது சரத் பொன்சேகாவுக்கு அதனை முப்படைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதிக்கே கூறுவதற்கு அனுமதி உள்ளது
அதைத் தவிர்த்து வேறு நபர்களிடம் அவர் தமது தகவல்களை வெளிப்படுத்தமுடியாது என்று தெரிவித்தார்.
மேலும், வருகிற 4ம் தேதி அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணைக்காக செல்லும்போது எந்தவித தகவல்களையும் வெளியிடக் கூடாது என்றும், அந்த விசாரணையையே முடிந்தவரை தவிர்க்குமாறும் பொன்சேகாவுக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications